முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோன மரணம்- இருவருக்கு தொற்று!

0 30

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் குறைவாக பதிவாகிவரும் நிலையில் 13.10.21இன்று மேலும் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் கொரோனா தொற்றுடன் சிசிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மாவட்டமருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்

இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டியன் மற்றம் பி.சி.ஆர் முடிவுகளின் படி முள்ளியவளைபிரதேசத்தில் ஒருவருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
75 அகவையுடைய கரடிப்புலவு நெடுங்கேணியினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் கடந்த 21.09.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது 01.10.21 அன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13.10.21 அன்று உயிரிழந்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.