முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை நோக்கிய கடற்பயணம!

0 15

எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாகஉள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

அந்தவகையில் முல்லைத்தீவில் இருந்து கடற்தொழில் அமைச்சருக்கு எதிராக ஒருதொகுதி படகுகள் கடல்வழியாக புறப்படவுள்ளன. இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டு உள்ள நிலையில் அதனை அரசு நடைமுறைப்படுத்த தயங்குகின்றது.

குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும் அவர் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவர் அதனை செயற்படுத்தாதன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்கு பகுதியில் மீனவர்களை பெரிதாக பாதிக்கின்றது.

எனவே குறித்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17ஆம் திகதி முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறைக்கு கடல் வழியாக சென்று அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தை
நடத்த தீர்மானித்துள்ளார்கள்.

இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்க முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எது எவ்வாறு இருந்தாலும் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து பருத்தித்துறை வரைகடற்பயணம் மேற்கொண்டு அமைச்சரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.