ஐரோப்பாவிற்குள் நுளைய முயன்ற இளைஞன் உடலமாக மீட்பு!

0 17

ஐரோப்பாவிற்குள் நுளைய முயன்ற இலங்கையினை சேர்ந்த இளைஞன் ஒருவர் பெலாரஸ் லிதுவேனியா எல்லைபற்றைக்காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி இலங்கை இளைஞனின் உடலத்தினை அடையாளம் கண்டுள்ளார்கள்.

29 அகவையுடைய இலங்கையினை சேர்ந்த இளைஞன் என உடமைகளில் இருந்து மீட்கப்பட்ட
சான்றுப்பொருட்கள் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டின் காவலர்கள் கடும் போக்கினை உடையவர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெலாரஸ் நாட்டிற்குள் நுளைபவர்களை விரட்டிஅடிப்பதுடன் அவர்களை காவலர்களால்கொடூரமாக தாக்குதல் நடத்தி உயிரிழக்க செய்யும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

இவவாறுதான் லிதுவேனியா நாட்டிலும் அந்த நாட்டின் காவலர்கள் சட்டவிரோத குடியேற்ற வாசிகளைபிடித்துவைத்துக்கொண்டு பணம் பறிப்பதும் சித்திரவதை செய்வதும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ன.

வெளிநாட்டு மோகத்தில் பல இலட்சம் ரூபா பணம் இடைத்தரகர்களுக்கு கொடுத்து ஜரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பலர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.