இலங்கையின் புகழ் பாடகி இந்தியாவின் பொலிவுட் சல்மான்கானுடன்!

0 18

இலங்கையில் மெனிகே மகே ஹித்தே பாடல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் யொஹானி இலங்கையில் அரசியல்வாதிகளாலும்பேசப்படும் ஒரு குடும்பமாக இவரின் குடும்பம் காணப்படுகின்றது.

கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின் மகளே இலங்கையின் பிரபல பாடகியொஹானி என்பது முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

யொஹானி டிசில்வாவின் அவரின் திறமைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.
ஒரு பாடல் மூலம் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்தியாவில் இருந்து அழைப்புவர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும் அவர் பாடியுள்ள நிலையில்குறித்த பாடலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 15 இல் யொஹானி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் சல்மான் கானுடன் இணைந்து யொஹானி மெனிகே மகே ஹித்தே பாடலை பாடும் டீசர் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.