தமிழர் வரலாற்றினை திரிவுபடுத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்!

0 11

தாய்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேசியம் பேசி போராட்டங்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர்தமிழர் அமைப்புக்கள் சிலவற்றால் இலங்கை தமிழர்களின் வரலாறு திரிவுபடுத்தப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை தொடர்பில் பலர் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

புலம்பெயர் தமிழர் தளத்தில் இலங்கை தமிழர்களின் தாய்மொழி கல்வி மற்றும் தமிழர்களின் வரலாற்று கல்வி என்பன மாற்றிஅமைக்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் பரப்பில் தமிழர்களின் வரலாற்று திணிப்காக கணிக்கப்பட்டுள்ளன.


சுவிட்ஸ்லாந் நாட்டில் அமைந்துள்ள தமிழர் கல்விபேரவையினர் பல மில்லியன் கணக்கான செலவு செய்து திரிவுபடுத்தப்பட்ட வரலாற்று புத்தகங்களை அச்சிட்டு புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளின் தமிழ்கல்வி மற்றும் வரலாற்று கல்விக்காக வழங்கியுள்ளார்.

அடுத்துவரும் தலைமுறைக்கு தமிழர்களி;ன் வலிசுமந்த வரலாறும்,தமிழர்களின் வாழ்வியலையும் மாற்றிஅமைக்கும் செயற்பாடாகவே திட்டமிடப்பட்டு பதிப்பிடப்பட்டுள்ளது.

தாய்நாட்டில் தேசியம் பற்றிசிந்திப்பவர்கள் இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். புலம்பெயர் தமிழர்களின்உதவியால்தான் வடக்கு கிழக்கில் உள் பல தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார பொருண்மிய வளங்கள் கட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன.சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் என் சொற்பதம்..

எல்லாளன் கட்டிய வவுனிக்குள வாவிக்கு பெலிவாவி என அழைக்கப்பட்டதான சொற்பதம்.
இவ்வாறு திரிவு படுத்தப்பட்ட பல சொற்பதங்கள்கொண்ட புத்தகம் இன்று புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளின்கைகளில் வழங்கப்பட்டு கற்றுக்கொண்டிருக்கின்றன.

எதிர்காலத்தில் தமிழர்கள் என்று எந்த அடையாளமும் இல்லாமல் செய்யும் செயற்பாடாகவே இது அமைகின்றது.இதனை பற்றி சிந்திப்பவர்களுக்கான செய்தியாகவே இது அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.