முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு!

0 77

முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,

தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த 40 அகவையுடை செல்வராசா செந்தீபன் செந்தில் என்று அழைக்கப்படும் இளைஞன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 06.10.21 இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த செந்தீபனிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிரார்த்திக்கின்றோம், அன்னாரில் உறவினர்கள் நண்பர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.