வட்டுவாகல் காணி அபகரிப்பு மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது!

0 180

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட்டுவாகல் கடற்படைதளம் அமைந்துள்ள
காணி அளவீட்டுப்பணிகள் இன்று(29) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வட்டுவாகல் கடற்படைத்தளம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி காணி அளவீட்டினை எதிர்த்துள்ளார்கள்.

காணியின் உரிமையாளர்கள் கிராம மக்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர்கள் க.விஜிந்தன்,புதுக்குடியிருப்பு சபையின் உபதவிசாளர் க.ஜெனமேஜெயந்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன்,எம்.கே.சிவாஜிங்கம்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,வினோநோகரதலிங்கம்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

காலை 9.00 மணிதொடக்கம் 1.30 மணிவரை வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

போராட்ட காரர்கள் அரசாங்க அதிபரைதொடர்பு கொண்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது பிரச்சனைக்கு தீர்வினை தாருங்கள் என கோரியுள்ளதை தொடர்ந்து

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் கோரிக்கைகளை அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்திநிலையில் அரசாங்க அதிபர் ஊடாக நிலஅளவை திணைக்களத்திற்கு விடையம் எடுத்துக்கூறப்பட்டு அளவீட்டுப்பணிகள் நடைபெறாது என போராட்ட காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாமிற்குள் சென்ற நில அளவைத்திணைக்கள அதிகாரிகளே இதனை சொல்லவேண்டும் என கோரியபோது நிலஅளவைத்திணைக்கள அதிகாரிகள் போராட்ட காரர்களிடம் வந்தவேளை குறித்த இடத்தில் அதிகாரிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படலாம் என பொலீசார் அவர்களை திருப்பிவேறு வழி ஊடாக அனுப்ப முற்றபட்ட போது போராட்டகாரர்கள் வானத்தினை மறிக்க முற்பட்ட போது பொலீசார் போராட்டகாரர்களை தள்ளிவிட்டு வாகனத்தினை எடுத்து செல்ல அனுமதித்துள்ளார்கள்.

இன்னிலையில் அளவீட்டுப்பணிகளில் ஈடுபட்ட நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் நேரில் வந்து பதில்கூறும் வரை வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அத்தியட்சகரை அழைத்து போராட்டகாரர்களின் முன்னால் வழங்கிய வாங்குறுதியினை தொடர்ந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.
அரசாங்க அதிபரிர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி முடிவு கிடைக்கும்வரை அளவீட்டுப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.