றெட்பானாவில் 10 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிககள் ஜவர் தப்பிஓட்டம்!

0 80

புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த முதிரைமரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!


புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த முதிரைமரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!
25.07.21 இன்று அதிகாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பான பகுதியில் இருந்து கடத்தப்படவிருந்த சுமார் பத்து இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் 5 பேர் தப்பி ஒடியுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.


றெட்பானா பகுதியில் காட்டில் அறுக்கப்பட்ட பெருமளவான முதிரை மரக்குற்றிகளை கொண்டுவந்து இறக்கி விட்டு வெளிமாவட்டத்திற்கு கடத்தப்படவிருந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் காணியின் உரிமையாளரை கைதுசெய்துள்ளார்கள்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் தப்பிஓடியுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் புதுக்குடியிருபு;பு பொலீசார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.