தேசிய வீரர்கள் தினம் பல இடங்களில் போஸ்ரல்!

0 57


தமிழ்தேசிய வீரர்கள் தினம் ஆடி 25 தொடக்கம் 27 வரை நினைவுகூரப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.


பல இடங்களில் ஒட்டப்பட்ட நோட்டிஸ்கள் கிழித்து எறியப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான கண்காணிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் ஏற்பாட்டில் வெலிக்கடை சிறைப்படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.


வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த குட்டிமணி,தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த போஸ்டல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.