கரும்புள்ளியான் வாள்வெட்டு 4 பேர் மல்லாவி பொலீசாரால் கைது!

0 269

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் உள்ள கரும்புள்ளியான் கிராமத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்கதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்திற்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த சி.சி.ரிவி கமராவின் சேமிப்பு பெட்டியினையும் கழட்டி சென்றுள்ளார்கள்.


இது குறித்து வாள்வெட்டு குழு குறித்து அடையாளம் காணப்பட்ட நபர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணை மேற்கொண்ட மல்லாவி பொலீசார் கரும்புள்ளியான் கிராமத்தினை சேர்ந்த 4 குற்றவாளிகளை சந்தேகத்தின் பெரில் கைதுசெய்து 19.07.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தியுள்ளார்கள்.
இவர்களை மன்று பிணையில் விடுதலை செய்துள்ளது 

Leave A Reply

Your email address will not be published.