முள்ளியவளை காஞ்சிரமோட்டை குளத்தில் இருந்து நீர் விரையம்!

0 414

முல்லைத்தீவு முள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள காஞ்சிரமோட்டை குளத்தில் தேக்கிவை;ககப்பட்டுள்ள நீர் மீன்பிடிப்பதற்காக கொட்டு திறந்துவிடப்பட்டு நீர் வீண்விரையமாக்கப்படுவதாக விவசாயிகள் கால்நடைவளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளார்கள்.


குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் அறுவடையினை முடித்துள்ள நிலையில் வயல் வெளிகளில் கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் கால்நடையினை மேச்சலுக்காக மேய்த்து வருகின்றார்கள்.


குளத்தில் உள்ள நீரை நம்பியே கால்நடைகள் மேச்சலில் ஈடுபட்டு வரும்நிலையில் கமநல சேவை திணைக்களத்தினால் குளத்தினை மீன் பிடிப்பவர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இன்னிலையில் மீன் பிடிப்பவர்கள் குளத்தின் கொட்டினை திறந்து தண்ணீரினை கழிவில் விடுவதால் சேமிக்ப்பட்ட நீர் வீண்விரையமாக்கப்படுவதுடன் குளத்து நீர் வற்றிசெல்லும் அபாயம் காணப்படுவதாகவும ;இதனால் கால்நடைகளுக்கு நீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


பல ஆயிரம் கால்நடைகள் குறித்த பகுதியில் மேச்சலுக்காக செல்கின்றன ஆனால் மீள்குடியேறி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் களிக்காடு,கோடாலிக்கல்லு,காஞ்சிரமோட்டை,போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்ககாக இதுவரை அரசாங்கத்தினால் மேச்சல் தரவை பெற்றுக்கொடுக்கப்படவில்லை பல தடவைகள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாத நிலையில் கால்நடை உரிமையாளர்கள் பெரும் சிரமங்களுக்கு எதிர்கொண்டு வருகின்றார்கள்.


நெற்செய்கை காலங்களில் கால்நடைகளை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்வதும்,அறுவடை முடிந்த காலங்களில் வயல் நிலங்களில் கால்நடைகளை மேய்ப்பதுமாகவே காணப்படுகின்றது.
இன்;னிலையில் காஞ்சிரமோட்டை குளத்தில் மீன் பிடிப்பவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இதனால் குளத்தின் கொட்டினை திறந்து நீரினை நீரினை வீண்விரயமாக்குவதால் கால்நடைகள தண்ணீரினை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.


விவசாய குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் குளத்தின் நீர் வீண்விரையமாக்ககூடாது என்பது விவசாய திணைக்களங்களின் நடைமுறை இதனையும் மீறியே இது நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.