கிளிநொச்சி ஆடைத்தொழில் சாலையில் 29 பேருக்கு கொரோனா!

0 202

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழில்சாலை ஊழியர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று இன்று (19) உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கிளிநொச்சி மாவட்டத்தில் டெல்டா வைரஸ் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்டுத்தியுள்ளது.


கிளிநொச்சி ஆடைத் தொழில்சாலைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பணிக்கு செல்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள்.


இன்றைய முடிவின் படி கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.