பிரித்தானியாவில் இருந்து யாழிற்கு வந்தவர் உயிரிழப்பு-கொரோனா!

0 141

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணம் திருபம்பிய ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.


இவரது உடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது பி.சி.ஆர். எடுக்கப்பட்டபோது கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 29 ஆம் திகதி லண்டனில் இருந்து இவர் நாடு திரும்பியுள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியினை சேர்ந்த 80 அகவையுடைய சிற்றம்பலம் இராசலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் அச்சுவேலி வைத்திய சாலையின் முன்னால் அத்தியட்சகர் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவரது உடலம் யாழ்போதனா மருத்துவமனையில் இருந்து சுகாதா நடைமுறைகளுக்கு அமைய மின்தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.