அமெரிக்கா,நெர்லாந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடிதத்தில் வந்த கஞ்சா!

0 113

இலங்கைக்கு கடிதத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து குஷ் எனப்படும் கஞ்சா கடத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இலங்கையின் தெற்கு சீதுவை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
05 கடித பொதிகளில் சுமார் மூவாயிரத்தி தொள்ளாயிரம் கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன இதன் பெறுமதி மூன்று மில்லியன் என சுங்கத்திணைக்களத்தின் போதைத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


அமெரிக்கா,மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து இலங்கையின் போலி முகவரி ஒன்றுக்கு குறித்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.