கொக்காவில்லில் கிரவல் அகழ்வு 4 வாகனங்களுடன் 5 பேர் கைது!

0 21

முல்லைத்தீவு கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு இடம்பெற்ற பகுதியொன்று இன்று முற்றுகையிடப்பட்டநிலையில்,4 கனரக வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமுலாக்கும் அதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பகுதிகளில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது

இதன்போது கிரவல் அகழ்விற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு மாறாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து கிரவல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.