விவசாய செய்கையினை அழித்து வீட்டுத்திட்டத்திற்கு வழங்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்!

0 227


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் விவசாயம் செய்துவரும் விவசாயி ஒருவரின் விவசாய செய்கையினை அழித்து குறித்த காணியினை வீட்டுத்திட்டத்திற்கு வழங்கவுள்ளதாக பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதால் விவசாயி ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு மனுக்கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தினை சேர்ந்த புலேந்திரராசா என்ற குடும்பஸ்தர் யாழில் இவர்களுக்கு சொந்தமான பூர்வீக காணியான 56 பரப்பு காணி 1986 ஆம் ஆண்டு பலாலி விமானத்தளத்திற்கு அபகரிக்கப்பட்ட நிலையில் 1995 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வந்து விசுவமடுவில் குடியேறியுள்ளார்.

விவசாயத்தினை நம்பிவாழ்ந்து வரும் இவர் மேட்டுநில பயிர்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயியாக காணப்பட்டுள்ளார்.விசுவமடு மேற்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு வேறு ஒருவருக்கு கிராமசேவையாளரால் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியினை விலைக்கு வாங்கி 2020 ஆம் ஆண்டு தொடக்கம் மேட்டுநில பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இன்னிலையில் எனது காணியினை பிரதேச செயலகம் விவசாய செய்கைகளை டோசர் போட்டு அழித்துவிட்டு வீட்டு திட்ட பயனாளிகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
விசுவமடு மேற்கு கிராம சேவையாளர் தனது தனிப்பட்ட பிரச்சனைக்காக என்னை விவசாயம் செய்யவிடாமல் தடுத்துள்ளதுடன் அவரின் நடவடிக்கையினால் பிரதேச செயலகம் எனது விவசாய காணியினை அழித்து அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


விசுவமடு மேற்கு பகுதியில் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இதுவரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை இன்னிலையிலேயே இந்த காணிக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை இவரது குடும்பம் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் எந்த வித வாழ்வாதார உதவிகளும் அற்ற நிலையில் விவசாய தோட்டங்கள் செய்தே வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர் தனக்கான விவாசய காணி இல்லாத நிலையிலேயே இந்த காணியினை விலைக்கு வாங்கி தோட்டம் செய்துவருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் பிரதேச செயலாளருடன் கதைத்தபோதும் அவர் அரச காணி அதனை வீட்டுத்திட்டம் வழங்குவதற்காக தீர்;மானித்துள்ளோம் என்று நேற்று(12) அதிகாரிகளை விட்டு பார்வையிட்டுள்ளதுடன் காணியினை விட்டு எழும்புமாறு வற்புறுத்தியுள்ளார்கள்.


விசுவமடு கமக்கார அமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள குறித்த விவசாயி பயிற்றை,வெண்டி,மிளகாய்,கத்தரி,கீரை போன்ற பயிர் செய்கையில் தொடர்சியாக ஈடுபட்டு வருவதுடன் விவசாய திணைக்களத்தினால் சிறந்த செய்கையாளர் என்று விதை தானியங்களும் வழங்கப்பட்ட நிலையில் விவசாயத்தினை அழித்து  காணியினை பறித்து வீட்டுத்திட்டத்திற்கு வழங்கவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விசுவமடு மேற்கு பகுதியில் எத்தனையோ பல இந்தியன்வீட்டுத்திட்டங்கள்,பல அரச காணிகள் பற்றைக்காடுகளாக காணப்பட்டபோதும் கிராமசேவையாளரின் தனிப்பட்ட நடவடிக்கையினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல அரசகாணிகள்,காடுகள் அழிக்கப்பட்டு அடாத்தாக அபகரிக்கும் சம்பவங்களை கண்டுகொள்ளாதக அரச நிர்வாகம் ஒரு விவசாயியினை வளரவிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம் என கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.


பாதிக்கப்பட்ட விவசாயி பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம்,வடமாகாணஆளுனர்,மனித உரிமைகள்ஆணைக்குழு,மாவட்ட அரசாங்கஅதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மக்களின் ஆதரவுடன் மனு ஒன்றினை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.