ஆசிரியர்கள் தடுப்பூசி ஏற்றும் சந்தர்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

0 188

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்ற (08) முன்னெடுக்கப்பட்டுள்ளது முல்லை கல்வி வலய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் 60 அகவைக்கு மேற்பட்டவர்கள் என இன்று 898 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையினர் தெரிவித்துள்ளார்கள்.


முல்லைத்தீவு உண்ணாப்பிலவு  வைத்திய சாலையில் இன்றைய நாளில் 440 ஆசிரியர்களும்,458 முதியவர்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள் ஆசிரியர்களுக்கான கொவிட் பாதுகாப்பு செயலணியினால் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.


முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பாடசாலைகளில் கல்வி கற்பித்து வரும் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசியினை ஆசிரியர்கள் அனைவரும் தவறாது பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்டத்தினை சேர்ந்த ஆசிரியர்களுக்காக ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய  2200 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஊசியினை ஏற்றிக்கொண்டார்கள்.
09.07.21 நாளை வெள்ளிக்கிழமையும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது இயலுமானவரை ஆசிரியர்கள் சந்தர்ப்பத்தினை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் களப்பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசியினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வெளிமாவட்டங்களில் களப்பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊசியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.