இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்ட நெடுந்தீவு மீனவரின் உடலம்!

0 614

நெடுந்தீவு பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற 08 ஆம் வட்டாரம் நெடுந்தீவினை சேர்ந்த 65 அகவையுடைய சில்வெஸ்ரார் மரியதாஸ் என்பவர் காணாமல் போன நிலையில் 07.07.21 அன்று தமிழ்நாட்டின் வேதாரணியம் கடற்கரையில் இவரது உடலம் கரைஒதுங்கியுள்ளது.


கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குடும்பத்தினர் உடலத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.


உடலம் அழுகிய நிலையில் சேமடைந்து கரைஒதுங்கியுள்ளதால் தமிழக மருத்துவர்களின் உடற்கூற்று ஆய்வின் பின்னர் வேதாரணியம் கடற்கரையில் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.