முல்லைத்தீவு-சுகாதார தொழில் சங்கங்களில் பணிபுறக்கணிப்பால் நோயாளர் அவதி!

0 107

நாட்டில் மருத்துவசேiயில் ஈடுபடும் 15 தொழில்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை,ஒட்டுசுட்டான்,மல்லாவி,உண்ணாப்பிலவு ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சைகள்,மருந்து வினயோகங்கள் பிரிவுகளில் மக்கள் சேவைகைள பெற்றுக்கொள்ளமுடியாத  நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


சுகாதார தொழில்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்று(06.07.21) இரண்டாவது நாளாக தொடர்வதால் செவ்வாய்கிழமைகளில் மாதந்தம் சிகிச்சை பெறும் ஊசி ஏற்றும் நோயளர்கள் மருத்துவரிடம் காட்டியும் மருந்துளையோ ஊசிகளையோ ஏற்றிக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்க்ள்.


மருத்துவர்கள் தங்களை பார்வையிட்டாலும் கிளினிக் நோயாளர்கள் மருந்துகளை ஊசிகளை ஏற்றிக்கொள்ளமுடியாமல் அலைச்சலுடன் வீடுதிரும்பியுள்ளார்கள் இன்னிலை தொடருமானல் மருத்துவர்களும் நாளை (புதன்கிழமை) பணியில் இருக்கமாட்டார்கள் என்று நோயாளர்களிடம் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மாதாந்த சிகிச்சை பெறும் நீரிழிவுநோயாளர்கள்,சுவாச நோயாளர்கள்,சிறுநீரக நோயாளர்கள்,மனநிலை  நோயாளர்கள்,மார்பக புற்றுநோய்,உயர்குருதிஅமுக்கம்,,இதயநோயாளகள்,நரம்பியல்நோயாளர்கள், பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.