முல்லைத்தீவில் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய ஆவா குழு-யாழில் மூவர் கைது!

0 366


முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த (27) வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகதனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனமொன்றுக்கு  தீ வைத்துள்ளார்கள்.


இச்சம்பவம் தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளார்கள்.


சி.சி.ரிவி கமராமூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேக நபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் வடமாகாண அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் இரகசிய தகவல் அனுப்பிவைக்கப்பட்டு;ளளது.


06.07.21 இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதான சந்தேக நபர்களை யாழ்மாவட்ட விஷேட குற்ற தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளார்கள்.முல்லைத்தீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் நாவாலி ஊரில் மூவரை கைது செய்துள்ளார்கள்
  மேற்கொண்டான விசாரணைகள் பொலீசாரினால்; முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.