பத்திரிகை சுதந்திரத்தினை வேட்டையாடுபவர்கள் பட்டியில் இலங்கை!

0 30

உலக நாடுகளில் ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு 2021ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


இதில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் இணைத்துக்கொண்டுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட உலக தலைவர்களின் படங்களை வெளிட்டுள்ளார்கள்.


அவர்கள் பயன்படுத்தும் முறைகள் அவர்களுடைய விருப்பத்திற்குரிய இலக்குகள் மற்றும் அவர்கள் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளது.


இலங்கை ஜனாதிபதியின் படத்தை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு பயங்கரம் மீண்டும் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.


இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் நிலைகள் குறித்து செய்திகளை அறிக்கையிடுவது என்பது மிகவும் கடினமான ஆபத்தானதாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.