புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையமாக அறிவிப்பு!

0 272

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியை இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையமாக அறிவிக்கப்பபட்டுள்ளது.


நாட்டில் மக்களுக்கு தேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டத்தினை துரிதப்படுத்தி புதிய தடுப்பூசிகளை சமூக நிலையங்கள் ஊடாக ஏற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.


ஜனாதிபதிஅவர்ளின் கட்டளைக்கு இணங்க இராணுவத்தளபதியும் கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுரையின் படி புதிய நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்களை இன்று நிறுவியுள்ளார்கள்.


மத்திய மாகாணத்தில் இராணுவத்தினரின் மருத்துவமனைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி இராணுவு ஆதார மருத்துவுமனையிலும்,மன்னார் மாவட்டதில் இலங்கை முதலீட்டுசபையின் கட்டடிடத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் திகதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வருவோர் மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண ரசீதுகளுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருதல் அவசியமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.