புதுக்குடியிருப்பு சிறீசுப்பிரமணியவித்திய சாலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

0 207

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் ஏற்பாட்டில் 60 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று மாலை 2.30 மணி தொடக்கம் புதுக்குடியிருப்பு சிறீசுப்பிரமணிய வித்தயசாலையில் தொடங்கிவைக்கப்படவுள்ளன.


அரசாங்கத்தினால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி என அறிவிக்கப்பட்ட போதும் ஏற்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள 60 அகவைக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள் உறுப்பினர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 60 அகவைக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.