சௌபாக்கியா வேலைத்திட்டம் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்!

0 48

முல்லைத்தீவு மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின்  கைவேலி கிராமத்தில்  30  பயனாளிகளை உள்ளடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சௌபாக்கியா உற்பத்திக்கிராத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (05)   இடம்பெற்றது

ஆடை உற்பத்தி ,தோல் உற்பத்தி பற்றிக் உற்பத்தி   ஆகியவற்றை  மேம்படுத்தும் நோக்கில் குறித்த உற்பத்திக்கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது .

குறித்த திட்டத்துக்கான நிரந்தர கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது

புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பெயர்ப்பலகையை திறந்து வைத்து அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்

நிகழ்வில் முல்லைத்தீவு  மாவட்ட  செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் உள்ளிடட அதிகாரிகளும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பயனாளர்கள் என பலரு கலந்துகொண்டனர்  

Leave A Reply

Your email address will not be published.