கனடாவில் காட்டுத்தீயினால் அழிந்த கிராமம்!

0 30

காட்டுத் தீ காரணமாக, கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லைட்டன் கிராமம் தீக்கிரையாகியுள்ளது.

அங்கு வாழ்ந்து வந்த அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெரும்பாலான வீடுகள் தீயினால் எரிந்து போயுள்ளன.

அதிகளவு வெப்பநிலை காணப்படுவதால் காட்டுத் தீ ஏற்பட்டு இந்த நாசம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளைபிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஐந்து நாட்களில் நிலவும் கடுமையான வெப்பத்தினால் நேற்று வரை 550 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென எதிர்பாராத வகையிலான இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், சாதாரணமாக இடம்பெறும் உயிரிழப்புகளை விட 66 சதவீதம் அதிகம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.