நினைவு கூர்த்தவர்கள் மீது சபாநாயகரே விசாரணை-கெஹலிய ரம்புக்வெல்ல!

0 73

நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவுகூர்ந்திருந்தால் அதுபற்றி சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று நடைபெற்ற உடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.


சாதாரணமாக மக்கள் வெளியிடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும்போது கைது செய்யப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் அவ்வாறு நினைவுகூர்பவர்கள் ஏன் கைது செய்யப்படாதிருக்கின்றார்கள் என்று வினவப்பட்டது.
எனினும் அமைச்சர் இந்தக் கேள்விக்கு மழுப்பல் பதிலையே அளித்திருக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.