மக்களே அரிசிக்கு தயாராக இருங்கள்?

0 146

நாட்டு மக்களுக்கான அரிசி களஞ்சியத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியே உள்ளதாக வர்த்த அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


இதன்படி அரிசியாலை உரிமையாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக நாட்டில் எதிர்வரும் வாரங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியினை இறக்கு மதிசெய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் அரிசியினை இறக்குமதி செய்வதற்காகவும் அரிசிக்கான தட்டுப்படு உருவாக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள அதேவேளை வன்னியில் இருந்து பல விவசாயிகள் நெல்லினை வீணான விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் தென்பகுதியினை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துவருகின்றார்கள்.


வன்னியில் அதிகளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இவ்வாறு அறுவடை செய்யும் நெல் வடமாகாணத்திற்கு தேவையான அரிசி இங்கேயே கிடைக்கப்பெறுகின்றபோதும் அங்கு வாழ்கின்ற மக்கள் விலைக்கு அரிசியினை வாங்கவேண்டிய நிர்பந்த்ததிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகள் தங்கள் நலனுக்காக அறாவிலையில் இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றார்கள் இதனால் இடைத்தரகர்களும் அனுராதபுரம்,பொலனநறுவை,குருநாகல் பகுதிகளில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே அதிகளவிலான இலாபம் அடைகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.