முல்லைத்தீவு சுவாமி தோட்டப்பகுதியில் குண்டு வெடிப்பு கணக்காளர் காயம்!

0 237

முல்லைத்தீவு சுவாமி தோட்டப்பகுதியில் குப்பைக்கு தீமூட்டியபோது குண்டு வெடித்ததில் அதில் பணிசெய்து வந்த கணக்காளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதை;தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


25.06.21 மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப்பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போது குப்பைக்குள் இருந்த வெபொருள் வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த கணக்காளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த வெடிப்பு சம்பவத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.