திம்பிலி கொரோனா சிகிச்சை நிலையம் மாற்றம் இனி முறுகண்டியில்!

0 195

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச்ததில் உள்ள திம்பிலி பகுதியில் படையினரால் அமைக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் கண்காணிப்பு நிலையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு இயங்கிவந்த நிலையில்


திம்பிலி சிகிச்சை நிலையம் மூடப்பட்டு அங்குள்ள பொருட்கள் அனைத்தும் முறுகண்டி பகுதியில் அமையப்பட்ட புதிய கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன
இன்னிலையில் முறுகண்டிப்பகுதியில் படையினரின் முகாமாக இயங்கிவந்த முகாம் ஒன்று கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு அங்கு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


திம்பிலி கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பலர் தங்களுக்கான சரியான உணவு மற்றும் ஏனைய வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து வந்துள்ள நிலையில் இது குறித்து சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டபோது திம்பிலி சிகிச்சை நிலையம் படையினரால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது அது முழுமைப்படுத்தப்படவில்லை அவசரமாக நோயாளர்களை அனுதிமதித்துள்ளமையே காரணம் என தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியில் முல்லைத்தீவு எல்லை பகுதியில் அமையப்பெற்ற இந்த சிகிச்சை நிலையத்தில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 157 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இரண்டு மாவட்டங்களையும் இணைந்த கொரோனா சிகிச்சை நிலையாக இது இன்றில் இருந்து இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனை விட நாட்டில் ஒரு கொரேனா தொற்றாளரை கவனிப்பதற்காக அதிகளவான நிதியினை அரசாங்கம் செலவு செய்கின்றது இன்னிலையில் கொரோனா நோயாளர்களை சரியான முறையில் கவனிக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.