வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்!

0 362

நாட்டில் பயணத்தடை இன்று 21.06.21 நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் தங்களின் இயல்பான வாழ்வியல் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளார்கள்.


முல்லைத்தீவு மாவட்டத்தின்,முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு,முள்ளியவளை,ஒட்டுசுடுட்டான்,மாங்குளம்,மல்லாவி,விசுவமடு போன்ற பிரதேசங்களின் நகர்பகுதிகளில் வங்கிகளிலும் நகை அடைகுவைக்கும் கடைகளிலேயே அதிகளவில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிலையங்கள்,மற்றம் சந்தை வியாபாரிகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் மக்களின் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நகர் பகுதிகளில் உள்ள வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தங்களின் விற்பனை பொருட்கள் சில திகதிமுடிவடைந்துள்ளதுடன் குளிர்சாதன பெட்டிகளில் உள்ள பொருட்கள் பல பாவனைக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர்பகுதியில் உள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இதேவேளை தொழில்ரீதியில் முடக்கப்பட்ட நாளாந்த தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக வங்கிகளிலும் நகை அடைவு வைக்கும் கடைகளையும் நாடியுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.