புதுக்குடியிருப்பில் அரச காணி அபகரிப்பு கிராமசேவையாளரால் முறைப்பாடு!

0 799

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காணிகள் தனி நபர்களால் அபகரிக்ப்பட்டுள்ள சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொhலீஸ் நிலையத்தில் கோம்பாவில் கிராமசேவையாளரால் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.


நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் உள்ள திம்பிலி குளம் மற்றம் அதனை அண்டிய காட்டுப்பகுதிகளில் தனி நபர்களால் கனரக இயந்திரம் கொண்டு காடு அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ளதுடன் காடுகளில் நின்ற பாரிய மரங்களும் அழிக்கப்பட்டுள்ளது குளத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்பட்டுள்ளன.
இச்சம்பவம் அண்மையில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து கோம்பாவில் கிராம சேவையார் தமிழ்ச்செல்வன் அவர்கள் குறித்த பகுதியினை பார்வையிட்ட போது அதில் கனரக இயந்திரங்கள் கொண்டு சுமார் 20 ஏக்கர் வரையில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அரச காணிகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் 20.06.21 அன்று கிராமசேவையாளரால் முறையிடப்பட்டுள்ளது.
நாட்டில் மக்கள் வெளியில் செல்லமுடியாத நிலையான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்பத்தினை பயன்படுத்தி ஒருசில பணபலம் படைத்தவர்கள் கனரக இயந்திரங்களை கொண்டு சென்று அரச காடுகளை அழித்துள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.


ஏனைய இடங்களில் காடுகளில் ஒரு சிறு தடிகூட வெட்டமுடியாத நிலை காணப்படும் நிலையில் எவ்வாறு பாரிய இயந்திரங்கள் கொண்டு காடு அழித்து காணியினை பிடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை அரச அதிகாரிளை கேள்விக்குறியாக்கும் செயல் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.