வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை குறைக்க கௌரவ பிரதமர் தலையீடு!

0 20

இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் பூர்த்திசெய்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு தீர்மானத்திற்கு வருமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) அலரி மாளிகையில் வைத்து ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தாழ்வான் பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றமைக்கு தீர்வு வழங்கும் வகையிலான கலந்துரையாடலின் போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கொளரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் முறையாக நிறைவேற்றப்படாமையால் மக்களும் அரசாங்கமும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.

மக்களுக்கு அவ்வாறு துரித தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒதுக்கீடுகளை உரிய முறைகளுக்குஅமைய பெற்றுக் கொடுக்கப்படும் என கௌரவ பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

பெதியாகொட, அம்பதலே, ஒலியமுல்ல நீர் உந்தி நிலையங்களை அண்மித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டம்,

மழை நீர் வடிந்தோடும் கால்வாய்களை சுத்திகரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் அத்துடன் புதிய நீர் உந்தி நிலையங்கள் மூலம் தண்ணீரை அகற்றுவது மற்றும் தாழ்வான பகுதிகளில் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத வகையில் குடியமர்த்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கௌரவ பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

வெள்ளத்தினால மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.

மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி சரியான முறைகளின் மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டங்களை செயற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என கௌரவ பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கூட்டாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்களை செயற்பத்துவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு பொறுப்பு உள்ளதாக தெரிவித்த கௌரவ பிரதமர், குறித்த வேலைத்திட்டங்களை விரைவில் இறுதி கட்டம் வரை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பல்வேறு அரச நிறுவனங்களுக்காக புதிதாக இணைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் ஊழியர்கள் நாட்டின் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கௌரவ பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு நகரை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் படகு போக்குவரத்தை முறையான ஒழுங்குறுத்தல் முறையுடன் முறைப்படுத்த வேண்டும் எனவும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதான, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன, கடுவெல நகரசபைத் தலைவர் திரு.புத்திக ஜயவிலால், கோட்டே நகரசபைத் தலைவர் ஐ.வீ.எம்.பிரேமலால், களனி பிரதேச சபையின் தலைவர் டப.டீ.சாந்தி குமுதினி, கொழும்பு மாநகர சபை, கோட்டே, கடுவெல, நகர சபையை பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.