தொழில் முடக்கம் அரச சொத்தில் கைவைத்த 5 பேர் கைது!

0 81

யாழில் தொழில் முடக்கத்தினால் தொழில்வாய்ப்பற்ற நிலையில் பலர் காணப்படுகின்றார்கள் இன்னிலையில் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
யாழ் மிருசுவில் பகுதியில் புகையிரத பாதைக்கு இரும்பு கேடருக்கு பொருத்தும் நட்டுக்கள் பலவற்றை திருடி இருப்பிற்கு விற்னை செய்துள்ளார்கள்.


இச்சம்பவம்தொடர்பில் தெரியவருகையில் புகையிரத தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கிளிப்புக்கள் கடந்த 14,15 ஆம் திகதிகளில் களவாடப்பட்டுள்ளன.


இவ்வாறு திருடப்பட்ட கிளிப்புக்களை வைத்திருந்த யாழ் ஜந்து சந்திப்பகுதியில் பொலீசார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.


இதன்போது இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய யாழ் அரியாலையினைசேர்ந்த நான்கு பேரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

புகையிரத பயணம் முடக்கப்பட்ட நிலையில் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.