தமிழ் மலர் பேரவையால் 700 குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கறி விநியோகம்!

0 48


முல்லைத்தீவு மாவட்டத்தில்  கொரோனா தொற்று காரணமாக வாலவாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கறிகளை விநியோகிக்கும் திட்டத்தினை தமிழ் மலர் பேரவை அமைப்பு மேற்கொண்டு வருகிறது

தமிழ் மலர் பேரவையினால் 300 ரூபா பெறுமதியான மரக்கறி வகைகள் அடங்கிய பொதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது  அந்த வகையில் செல்வபுரம் ,முள்ளிவாய்க்கால் கிழக்கு ,முள்ளிவாய்க்கால் மேற்கு ,வட்டுவாகல்,உடையார்கட்டு ,உண்ணாப்புலவு ,முள்ளியவளை உள்ளிட்ட பகுதிகளுக்கான 200 மரக்கறி பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது

இதனை விடவும் இதற்க்கு முன்பதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் சுமார் 500 மரக்கறி  பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன 

தமிழ் மலர் பேரவை அமைப்பின் செயலாளர் லோ.நிக்சன் தலைமையில் இடம்பெற்றுவரும்  குறித்த செயற்றிட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய   இராணுவத்தின் உதவியுடன் வீடுவீடாக சென்று மக்களுக்கு வழங்கி வைக்கப்படுகிறது

அந்தவகையில் நேற்றைதினம் 200  மரக்கறி பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இந்த  நிகழ்வில் 591 ஆவது படைப்பிரிவின் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் சுகாதார பரிசோதகர், கிராம அலுவலர், கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர், அதிகாரிகள் தமிழ் மலர் பேரவையின் தலைவர் அ.சண்முகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.