இரண்டாம் கட்ட நிவாரண உதவிகளை வழங்குமாறு மக்கள் கோரிக்கை!

0 94

முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கான இரண்டம் கட்ட நிவாரண கொடுப்பனவுனை வழங்கு மாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17.05.21 ஆம் திகதி தொடக்கம் 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 07.06.21 அன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமசேவையாளர் பிரிவினை சேர்ந்த 6ஆயிரத்தி 460 குடும்பங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இரண்டு கிராமசேவையாளர் பிரிவினை சேர்ந்த 867 குடும்பங்களுக்குமான அரசாங்கத்தின் 10ஆயிரம் ரூபா நிவாரண பொதிகள் வழங்கப்படும் என அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.


இன்னிலையில் முதற்கட்ட 5ஆயிரம் ரூபா நிவாரண பொதி வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிவாரண பொதியினை விரைவுபடுத்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தொழில் முடக்கத்தினால் பல்வேறு குடும்பங்கள் நாளாந்த வருமானம் அற்ற நிலையில் அரசாங்கத்தின் உதவியினையே நம்பி வாழ்வதாக தெரிவித்துள்ளார்கள்.


போரால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த நிலையிலும் அங்கவீனர்களாகன நிலையிலும், வயோதிபர்களாகவும்,பிள்ளைகளை தொலைத்த நிலையிலும் வாழ்ந்து வரும் தாங்கள் அரசாங்கம் பயணத்தடையினை விதித்துள்ளதால் நாளாந்தம் கூலி வேலை செய்து குடும்பத்தினை பார்த்துக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.


இது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் வினாவியாபோது மக்களுக்கான இராண்டாம் கட்ட நிவாரண பொதிகள் கொடுக்கும் நடவடிக்கையில் பொதிகளை தயார்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.