இத்தாலி மனிதநேய சங்கத்தால் புதிய வீடு-கையளித்தார் சிறீதரன்MP!

0 133

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஏராளமான பெண்கள் தமது கணவனை இழந்து பெண்  தலைமைத்துவ குடும்பங்களாக  இன்றும் தமது வாழ்வை கொண்டு நடாத்துவதற்கு அல்லல் பட்டவாறு வாழ்ந்து வருகின்றனர்
இவ்வாறான உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆற்றிவரும் சேவைகள் மிகப்பெரியது
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம். புதியகுடியிருப்பு  பகுதியில் கணவனை இழந்த நிலையில் பெண் பிள்ளை ஒருவருடன் வாழ்ந்து வருகின்றார் நிரவியறாஜ். சிவபாய்க்கியவதி.


தனது பிள்ளையுடன் தற்காலிக கூடாரத்தில் அல்லல்பட்ட தாய்க்கு இத்தாலி மனிதநேய சங்கத்தால்  புதிய நிரந்தர வீடு ஒன்று அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது

இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஸ்தாபகர் மகேஸ்வரநாதன் கிருபாகரன் அவர்களுடைய கோரிக்கைக்கு அமைய 50 பிறந்த நாளை கொண்டாடும் நல்லையா பாஸ்கரன் அவர்களின் நிதி பங்களிப்பில் அவரது தாயாரின் ஞாபகார்த்தமாக  இராசமணி இல்லம் எனும் நாமத்துடன் குறித்த நிரந்தர வீடு அமைத்து பயணாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இத்தாலி மனிதநேய சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் எஸ்.புஸ்பகாந்தன் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு குறித்த வீட்டினை பயணாளியிடம் கையளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.