முல்லைத்தீவில் 250 கால் போத்தல் சாராயங்களுடன் இளைஞன் கைது!

0 413

முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் சட்டவிரோத மதுபானங்களை கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.


வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 அகவையுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த வானமும் முல்லைத்தீவு பொலீஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.


நாளை இவரைநீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.