யாழில் உந்துருளியில் சென்றரை கதைகேட்பதைபோல் மறித்து தள்ளிவிட்டு பகல் கொள்ளை!

0 174

யாழில் உந்துருளியில் சென்றரை கதைகேட்பதைபோல் மறித்து தள்ளிவிட்டு பகல் கொள்ளை!
யாழ்ப்பாணம் அரசவீதியில் பயணித்த சுகாதார திணைக்கள உத்தியோகத்தரின் உந்துருளியினை கொள்ளைக்கும்பல் ஒன்று அடாத்தாக பறித்து சென்றுள்ளது.

நேற்று 11.06.21 பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது


கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றும் அரச உத்தியோகத்தன் பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்ககையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது


யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பயணித்த அவரை நிறுத்தி கதை கேட்பதை போன்று கதை கேட்ட கொள்ளையர்கள் அவரை தள்ளிவிட்டு உந்துருளியினை பறித்து சென்றுள்ளார்கள்.


நான்கு பேர் கொண்ட கொள்ளைகும்பல் இந்த செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது இது குறித்து கோப்பாய் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.