திருச்சி சிறையில் நான்காவது நாளாக தொடரும் போராட்டம்!

0 54


நான்காவது நாளாக இன்று 12.06.21  கவனயீர்ப்பு போராட்டம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது 


இதில் விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்ற பிணையில் வந்தவர்களை கைது செய்து மறுபடியும் சிறப்பு முகாமில் காலவரையின்றி எந்தவிதமான நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதனால வெளியில் அவர்களின் குடும்பங்களுடன் இருந்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தினை நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.


தமிழகத்தின் அரசியல் தலைமைகளின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் இவர்கள் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றும் விடுதலை ஒன்றே இவர்களின் இறுதி கோரிக்கை என்று தெரிவித்து தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.