மாதர் சங்கக் கட்டிடம் உடைத்து திருட்டு!

0 165

கிளிநொச்சியில் மாதர் சங்க கட்டடிம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி திருநகர் வடக்கு மாதர்சங்கத்தின் கட்டிடத்தில் இருந்த மாவட்ட மாதர்சங்கங்களின் தளபாடங்கள் திருநகர் வடக்கு மாதர்சங்கத்தின் தளபாடங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் உபகரணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.


இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.