அறிவுறுத்தல்களுடன் ஆடைத்தொழில்சாலை திறக்க MOH அனுமதி!

0 392

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல கொரோனா தொற்றாளர்களை உருவாக்கிய ஆடைத்தொழில்சாலை கடந்த 17.05.21 அன்று தொடக்கம் பல நூற்றுக்கணக்கான கொரோன தொற்றாளர்களை உருவாக்கி 17.05.21 அன்று தொடக்கம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமங்களை முடக்கி இன்று 21 நாட்கள் கடந்துள்ள நிலையில் மீளவும் திறப்பதற்கான அனுமதியினை புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வழங்கியுள்ளார்கள்.

ஆடைத்தொழில்சாலை மீளவும் இயங்குமாக இருந்தால் அது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய பிரச்சினையினை உண்டுபண்ணும் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.


இன்னிலையில் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றுபவர்களில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமமைந்த அல்லது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று அறியப்படாதவர்களை கொண்டு தொழில்சாலையினை இயக்கவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.