தேராவில் விவசாய பண்ணையில் 550 கிலோஉழுந்து களவு!

0 142

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தின் மாதிரி விவசாய பண்ணையில் களஞ்சியப்படுத்தப்பட்ட விதை உழுந்து 550 கிலோ திருடப்பட்டுள்ளது. இதன் பொறுமதி 4.5 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.


நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 01.06.21 அன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்பண்ணையின் முகாமையாளரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது


இது குறித்து விவாசய திணைக்களத்தில் குழு அமைத்து விசாரணை இடம்பெற்று வருவதாக விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாதிரி பண்ணையில் பயிர்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட அறையில் இருந்த விதை உழுந்து பைகள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் அன்றைய தினம் மாதிரி பண்ணையில் கடமையில் இருந்து காவலாளிகள் இருவரிடம் விசாரணையினை மேற்கொண்டு இருவரையும் கைதுசெய்து வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் பிணையில் விடுவித்துள்ளார்கள்.

சம்பமவ் தொடர்பில் விவசாய திணைக்களத்தினால் பண்ணையில் பணியாற்றுபவர்களையே சந்தேகம் கொண்;டு  குழு அமைக்கப்பட்டு அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.