யாழினை சேர்ந்த குடும்பஸ்தர் சென்னையில் மரணம்!

0 61

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சென்னையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று 01.06.21 அன்று உயிரிழந்துள்ளார்.


சென்னையில் வசித்து வந்த நிலையில் கொரோனாதொற்றுக்கு இலக்காகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான டென்சில் ராஜ்குமார் என்வரே உயிரிழந்துள்ளார்.


இலங்கையில் இருந்து குடும்பத்துடன் இடம்பெயர்ந்து இராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வசித்துவந்து பின்னர் சென்னையில் வசித்து வந்துள்ளார்.


இன்னிலையில் கொரோன தொற்றுக்குள்ளாகி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.