புதுக்குடியிருப்பு பொலீசாரின் நடவடிக்கையினால் பணத்தினை எடுத்துக்கொள்ளமுடியாத நிலை!

0 477


முல்லைத்தீவு மாவட்டத்தில் 19 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்கள் பணத்தினை எடுத்பதற்கும் மற்றும் வங்கி நடவடிக்கையினை மேற்கொள்வதாக இருந்தால் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வங்கிகளுக்கே வரவேண்டிய நிலையில்.


கடந்த 17 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிசெய்பவர்கள் உள்ளிட்ட வங்கிகளில் சேமிப்பினை செய்த மக்கள் தற்போது பணத்தினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.


வங்கிளில் ஏ.ரி.எம் இயந்திரம் கூட பூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வங்கி பூட்டப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.

மக்கள் வங்கிகளில் உள்ள தங்கள் பணத்தனை எடுத்து அன்றான வாழ்க்கை செலவினை கொண்டு நடத்த முடியாத நிலையில் திண்டாடிவருகின்றார்கள்.


நடமாடும் சேவைஊடாக என்றாலும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.