முன்னால் எம்.பியான தேரர் கொவிட் தொற்றினால் மரணம்!

0 42

கொவிட் நியூமோனியா நிலை காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான, பத்தேகம சமித்த தேரர் மரணமடைந்துள்ளார்.

லங்கா சம சமாஜக் கட்சியின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மாத்தறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு 68 வயதாகும். தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அவர், காலி, பத்தேகம, கொதட்டுவு ஸ்ரீபாதகொடெல்ல விகாரையின் விகாராதிபதியுமாவார்.

இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாது தேரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ள பத்தேகம சமித தேரர், 2001 முதல் 2004 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.