புதுக்குடியிருப்பில் தாய்த்தமிழ் பேரவையினால் 160 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி வழங்கல்!

0 76

முல்லைத்தீவு மாவட்டத்தினை தளமாக கொண்டு இயங்கும் தாய்ததமிழ் பேரவையின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாத்திரம் 160 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கவைக்கப்பட்டுள்ளன.


கொரோனா நெருக்கடி காலத்தில் பசிபோக்கும் நற்பணி திட்டத்தின்ஊடாக புலம் பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தாய்தமிழ் பேரவையின் நிறுவுனர் றூபன் அவர்களினால் இந்த உதவிகள் நேரடியாக சென்று வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.


புதுக்குடியிருப்பு மஞ்சல் பாலத்திற்கு அங்கால் 80 குடும்பங்கள் உள்ளிட்ட மொத்தமாக 160 குடும்பங்களுக்கு இதுவரை வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பேரவையின் நிறுவுனர் தெரிவி;த்துள்ளார்


கொரோனா காலத்தில் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.