புதுக்குடியிருப்பில் இலங்கைவங்கியின் நடமாடும் சேவை!

0 1,745

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம் பணம் எடுக்கும் இயந்திரத்தின் நடமாடும் சேவை ஒன்று 29.05.21 இரண்டு இடங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்குடியிருப்பில் 9 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பணத்தினை எடுப்பதற்காக புதுக்குடியிருப்பு நகர்பகுதிக்கு செல்வதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இன்னிலையில் மக்கள் தங்கள் அன்றாட செலவிற்காக வங்கியில் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்வதற்கான இலங்கை வங்கியின் நடமாடும் சேவை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரணைப்பாலை சந்தியில் 9.00 மணிதொடக்கம் 12.30 வரையும் குழந்தை யேசு கோவில் சந்தியில் 12.30 தொடக்கம் 3.00 மணிவரை ஏ.ரி.எம் ஊடாக பணம் எடுக்கும் சேவையினை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.


மக்கள் பொதுசுகாதார விதிமுறைப்படி இயந்திரத்தில் பணத்தினை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைவேலி தொடக்கம் தேராவில் பகுதி வரையான மக்கள் வங்கிக்கு சென்று பணத்தனை எடுக்கமுடியாத நிலை காணப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.