இரணைப்பாலை-மாத்தளன் சிறுகடல் மீனவர்களுக்கிடையில் மோதல் 4 பேர் மருத்துவமனையில்!

0 383

முல்லைத்தீவு மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலைசிறுகடலில் றால் பிடித்துவரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முல்லைத்தீவு பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்ள் றால்கூடு கட்டி றால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.


கடந்த முதல்நாள் இவர்கள் கட்டிய றால்கூட்டில் றால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு சாலை சிறுகடலுக்கு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து பதிலுக்கு மாத்தளன் பகுதியினை சேர்ந்தவர்களும் தாக்கியுள்ளார்கள்.

இன்னிலையில் வாள்,கம்பி,கத்தி போன்றன கொண்டு இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது இரணைப்பாலையினை சேர்ந்த மூன்று மீனவர்களும்,மாத்தளன் பகுதியனை சேர்ந்த ஒரு மீனவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


தாக்குலின் போது இரண்டு மோட்டார் சைக்கில்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் இரணைப்பாலையினை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.