முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம்!

0 295

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலும் 05 நிரந்தர வீடுகளும் 13 தற்காலிக வீடுகளுமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இலிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 06 தற்காலிக வீடுகளும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 05 தற்காலிக வீடுகளும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 01 தற்காலிக வீடுகளும் 02 நிரந்தர வீடுகளும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 02 நிரந்தர வீடுகளும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு தற்காலிக வீடும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிரந்தர வீடுமாக மொத்தமாக 18 வீடுகளே இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 18 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.