பூதன்வயல் கிரமத்தில் அனைவருக்கும் அவசரகால உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

0 581

வன்னியின் கணண்ணீர் என்ற அமைப்பின் ஊடாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குஉட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் 160 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த மக்கள் நாளாந்தம் கூலித்தொழில் செய்தே தங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்தி வருகின்றார்கள் இந்த மக்களின் நிலை அறிந்து கொரோனா அவசரகால உலர் உணவு பொதிகள் கிராமத்தில் உள்ள 225 குடும்பங்களுக்கும் கிரமசேவையாளர் ஊடாக பிரதேச செயலாளரின் அனுமதியுடன் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


இதில் 160 குடும்பங்களுக்கான தலா 2300 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கு ம் நிகழ்வு தண்ணிமுறிப்பு அ.த.க.பாடசாலை முதல்வர் ச.குகதாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதன்போது கிராம சேவையாளர்,சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுகான பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.

அவுஸ்ரேலியாவில் வசிக்கின்ற முரளிதரன் குடும்பம் மற்றும் காலஞ்சென்ற கந்தையா செல்வச்சந்திரன் ஆகியோரின் நிதி உதவியில் இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பூதன் வயல் கிராமத்தில் மேலும் 65 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


பூதன் வயல் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கிரமசேவையாளர்,சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.